CRIME
“இது என்ன கொடுமை..” சொந்த மகனேயே அறையில் பூட்டி வைத்து தந்தை செய்த சித்திரவதை.. முஸ்லிம் பெண்ணை மணந்த இந்து வாலிபருக்கு நடந்த கொடூரம்… நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியைச் சேர்ந்த ஆயுஷ் மாலிக் என்ற இளைஞர், தன் விருப்பப்படி இஸ்லாம் மதத்தை ஏற்று சாந்தினி குரேஷி என்ற முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்ததால், கடந்த 3 மாதங்களாகத் அவரது குடும்பத்தினரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கொடுமை அம்பலமாகியுள்ளது. இவர்களின் திருமணத்தை ஏற்காத ஆயுஷின் தந்தை, இந்துத்துவ தலைவர் யஷ்வீர் மகாராஜின் அழுத்தத்தால், தனது மருமகள் சாந்தினி மற்றும் அவரது தந்தை மீது கட்டாய மதமாற்றப் புகார் அளித்து அவர்களைக் கைது செய்ய வைத்தார். அதன் பின்னர், ஆயுஷ் தனது சொந்த வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டு, அவரது தலைமுடி மற்றும் தாடி மொட்டையடிக்கப்பட்டு, கட்டாயப்படுத்தி இந்து தெய்வங்களை வழிபட வைக்கப்பட்டதோடு, அது வீடியோவாகவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த ‘ஏபிஆர்சி’ என்ற சட்ட அமைப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ததை அடுத்து, ஆயுஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த ஆயுஷ், தான் சுயநினைவோடும் சொந்த விருப்பத்தின் பேரிலுமே இஸ்லாத்தைத் தழுவி சாந்தினியைத் திருமணம் செய்ததாகவும், “பாதுகாப்புக் காவல்” என்ற பெயரில் ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டுத் தனது வாழ்க்கை சித்திரவதையாக்கப்பட்டதாகவும் கூறினார். ஆயுஷை “மனநலம் குன்றியவர்” என நிரூபிக்க அவரது தந்தை முயன்ற போதிலும், உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்து, ஆயுஷ் தனது விருப்பப்படி சாந்தினியுடன் இணைந்து வாழ முழு சுதந்திரம் வழங்கி அதிரடி உத்தரவிட்டது. ஜாமீனில் வெளிவந்துள்ள சாந்தினி மற்றும் அவரது தந்தையுடன் ஆயுஷ் தற்போது இணைந்துள்ளார்.
