“ஆகாஷ் இல்லாம என்னால வாழ முடியாது” நள்ளிரவில் காதலி வீட்டில் சிக்கி அடி வாங்கிய இளைஞர்.. காலையில் காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆகாஷ் இல்லாம என்னால வாழ முடியாது” நள்ளிரவில் காதலி வீட்டில் சிக்கி அடி வாங்கிய இளைஞர்.. காலையில் காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், நள்ளிரவில் காதலியின் வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரிடம் வசமாகச் சிக்கிய ஆகாஷ் (20) என்ற இளைஞருக்கு, காவல் நிலையப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதே பெண்ணுடன் கோயிலில் வைத்துத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது காதலியைப் பார்ப்பதற்காக நள்ளிரவில் அவரது வீட்டிற்குச் சென்ற ஆகாஷை, பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பிடித்துக் கடுமையான தர்ம அடி கொடுத்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மறுநாள் காலையில் இந்த விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினரையும் அழைத்து விஜய் நகர் காவல் நிலையப் போலீசார் தீவிர விசாரணை மற்றும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவலாளர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் பேசிய அந்த இளம்பெண், “ஆகாஷ் இல்லாமல் என்னால் வாழவே முடியாது, அவர் மீது எந் தப்பும் இல்லை” என்று கூறி அழுது ஒற்றைக்காலில் நின்றுள்ளார். பெண்ணின் இந்த உறுதியான காதலைப் பார்த்த இரு வீட்டாரும் தங்களது கோபங்களை மறந்து, அவர்களின் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் முன்னிலையிலேயே இரு குடும்பத்தினரும் இணைந்து பக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் அந்த காதல் ஜோடிக்குச் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து வைத்தனர். நள்ளிரவில் அடிதடி மற்றும் போலீஸ் புகாருடன் தொடங்கி, மறுநாள் காலையிலேயே சுமுகமாக காதல் திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in