LATEST NEWS
“பிச்சை போட மாட்டியா.? பெண்ணின் மூக்கை கடித்து மூக்குத்தியை பறித்த யாசகர்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடந்து சென்ற மும்பையைச் சேர்ந்த மோனிகா என்ற பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் யாசகம் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், எதிர்பாராத விதமாகப் பெண்ணைத் தாக்கியுள்ளார்.
அந்நபர் மோனிகாவை அருகில் இருந்த புதருக்குள் தள்ளி, அவரது கழுத்தை நெரிக்க முயன்றுள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் மூக்கைக் கடித்து, அவர் அணிந்திருந்த மூக்குத்தியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படும் அந்த நபரை அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகள் மூலம் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
