CRIME
“அடச்சீ நீயெல்லாம் ஆசிரியரா..?” அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அரங்கேறிய கொடூரம்… ஓவிய ஆசிரியர் செய்த அசிங்கம்.. திடுக்கிடும் பின்னணி..!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது, அங்கு பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான அச்சுறுத்தல் கொடுத்ததாகக் கடுமையான புகார்கள் எழுந்தன. கடந்த ஜூன் மாதம் பள்ளியில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் உடனடியாக விசாரணையைத் தீவிரப்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.
புகாரைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாகப் பேசி விபரங்களைச் சேகரித்தனர். இந்த ரகசிய விசாரணையில் ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீதான பாலியல் அத்துமீறல்கள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த அதிகாரப்பூர்வமான புகாரின் அடிப்படையில், உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் மதன்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
