CRIME
“வெளியே சொன்னா கொன்னுடுவேன்..!” காதலன் உட்பட 4 பேர் செய்த கொடூர துரோகம்.. நாய்கள் கடித்துக் குதறிய சிறுமியின் உடல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்ணணி..!!
டெல்லியின் சுவரூப்நகர் புறநகர் பகுதியில் உள்ள வயல்வெளியில், ஒரு சிறுமி அவரது காதலன் உட்பட 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிறுமியின் உடல், வயல்வெளியில் நாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் துண்டான கையுடனும், அடையாளம் காண முடியாத முகத்துடனும் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்ததும், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததும் உறுதியானது. அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் சிறுமி காணவில்லை என்ற எந்தப் புகாரும் இல்லாததால், ஆரம்பத்தில் இந்த வழக்கைக் கையாள்வதில் போலீசாருக்குப் பெரும் சவாலாகவும் குழப்பமாகவும் இருந்தது.
இதனையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தபோது, ஒரு மினி வேன் சம்பவ இடத்திற்குச் சென்று வந்ததை அடையாளம் கண்டனர். அந்த வேன் டிரைவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கொலைக் குற்றவாளிகளான சிவம் என்ற சுதாமா (19) மற்றும் மூன்று சிறுவர்கள் உட்பட மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் சிறுமியின் காதலன் ஆவார். இவர்கள் அனைவரும் சேர்ந்து வயல்வெளியில் மது அருந்தியதும், பின்னர் சிறுமியைப் பலாத்காரம் செய்ததும், இந்த விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என்று சிறுமி மிரட்டியதால் கத்தியால் குத்திக் கொலை செய்ததும் ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் அம்பலமானது. இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு 72 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
