CRIME
பகீர் கொடூரம்..! 5 வயது மகளை கொன்று பிரிட்ஜில் வைத்த தந்தை… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்… வெளியான திடுக்கிடும் காரணம்..!!
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் கடுமையான கடன் சுமை காரணமாக, 5 வயது மகளைக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராஜுலா பகுதியைச் சேர்ந்த கிஷோர் தனக் (40) என்ற நபர், தனது மனைவி பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்த கொடூர முடிவை எடுத்துள்ளார். உறவினர்கள் வந்து பூட்டியிருந்த வீட்டை உடைத்துப் பார்த்தபோது, கிஷோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய சோதனையில் அவர் எழுதி வைத்திருந்த 3 தற்கொலைக் கடிதங்கள் கிடைத்தன. அதில், தொழிலில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் மற்றும் பணப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்வதாகவும், தனக்குப் பிறகு தனது 5 வயது மகள் ஹிமான்ஷி கஷ்டப்படக் கூடாது என்பதால் அவளைக் கொன்று உடலைப் பிரிட்ஜில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் பிரிட்ஜைத் திறந்து பார்த்தபோது, சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
மேலும், தற்கொலைக்கு முன்பாக கிஷோர் அந்த அறையைப் பலூன்கள், மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து, மகளுக்குப் புத்தாடை அணிவித்து, சாக்லேட்டுகளை வழங்கி ஒரு போலி பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியுள்ளார். அதன் பின்னரே மகளை மூச்சு திணறடித்துக் கொலை செய்து பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விசித்திரமான மற்றும் கொடூரமான கொலைச் சம்பவம் குறித்து ராஜுலா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
