CRIME
“என் கல்யாணத்துக்கு நீ தடையா இருக்கக் கூடாது..!” காதலியை மொட்டை மாடிக்கு கூப்பிட்டு காதலன் செய்த கொடூர காரியம்.. நடுங்க வைக்கும் பிண்ணனி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், பல வருடக் காதலை மறைத்து வேறு திருமணம் செய்வதற்காக, காதலியை மொட்டை மாடிக்கு வரவழைத்துக் கொடூரமாகக் கொலை செய்த காதலன் மற்றும் அவனுக்குத் துணையாக இருந்த அவனது தாயை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தேவ்பந்த் பகுதியைச் சேர்ந்த மோஹித் என்ற வாலிபர், ஜோதி என்ற பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மோஹித் தனது சகோதரனின் மைத்தினியைத் திருமணம் செய்யத் திட்டமிட்டதால், ஜோதியுடனான பழைய காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் தனது கௌரவம் பாதிக்கும் என அஞ்சி, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இதன்படி, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஜோதியைத் தனது வீட்டு மொட்டை மாடிக்கு வரவழைத்த மோஹித், அவரது மொபைலை அணைத்துவிட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இந்த விவகாரத்தைத் தனது தாய் ஓம்வதியிடம் கூற, பெற்ற மகனின் குற்றத்தை மறைக்க எண்ணிய அந்தத் தாய், சடலத்தை பைக் நடுவே அமர வைப்பது போல் துணியால் மூடி எடுத்துச் சென்று சாக்கன் கால்வாயில் வீசியுள்ளார். கால்வாயோரம் ஒதுங்கிய சடலத்தை மீட்ட போலீஸார், தீவிர விசாரணை நடத்தி மொபைல் போன் மற்றும் பைக்கைக் கைப்பற்றியதுடன், கொடூரக் கொலை செய்த தாய்-மகனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
