CRIME
“நீ வேறொருவனுடன் பேசுகிறாயா..?!” கோவா டூர் ஆசையாக அழைத்து சென்ற காதலியை கொடூரமாக கொன்ற காதலன்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
கோவா அருகில் உள்ள தர்பந்தோரா காட்டுப்பகுதியில், பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் அவரது காதலனால் கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் பள்ளி ஊழியராகப் பணியாற்றி வந்த அந்தப் பெண், தனது முன்னாள் வகுப்புத் தோழனும் காதலனுமான சஞ்சய் கெவின் என்பவருடன் பேருந்து மூலம் கோவாவுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள மொல்லம் வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குச் சென்றபோது, காதலி வேறு ஒரு ஆணுடன் பழகுவதாகச் சந்தேகமடைந்த கெவின், தான் திட்டமிட்டு மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
எந்தவொரு தடயமும் இல்லாத இந்த மர்மக் கொலை வழக்கை, கோவா காவல் துறையினர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வுக் குழுவின் உதவியுடன் வெறும் 24 மணி நேரத்திற்குள் துப்புதுலக்கிக் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பர்சில் இருந்த பேருந்து டிக்கெட்டைக் கைப்பற்றிய போலீசார், அது UPI மூலம் பணம் செலுத்தப்பட்டதை அறிந்து அதன்வழியாகக் கொலையாளி கெவினின் மொபைல் எண்ணைக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து கர்நாடகாவின் ஹுப்பள்ளி நகரில் வைத்து கெவினைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், காதலி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவசரப்பட்டு இந்தக் கொடூரக் கொலையைச் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
