CRIME
“கடைசியா ஒரே ஒரு முறை பார்க்கணும்..” காதலியை வரழைத்து காதலன் செய்த பகீர் காரியம்.. 6 வருடக் காதலின் கொடூர முடிவு.. கதி கலகங்க வைக்கும் பின்ணணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டதை அடுத்து காதலை நிராகரித்ததால், பிரோஸ் என்ற இளைஞன் தனது முன்னாள் காதலியான சம்ரீனை (25) கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்ரீனுக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததை அடுத்து, அவர் பிரோஸுடனான காதலை முறித்துக் கொண்டார். ஆனால் இந்தத் திருமண ஏற்பாட்டை ஏற்க மறுத்த பிரோஸ், சம்ரீனை கடைசி முறையாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று கூறி வரவழைத்து, இந்த விபரீத கொலையைச் செய்துள்ளார்.
கொலை செய்த பின்னர், சம்ரீனின் உடலை அந்தப் பகுதியில் உள்ள ஒரு வெட்டவெளியில் வீசிவிட்டு பிரோஸ் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தப்பியோடிய பிரோஸைக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். 6 ஆண்டு காலக் காதல், ஒரே ஒரு நிராகரிப்பால் கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் மீரட் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
