CRIME
ஐயோ கொடுமையே.. வைரல் வீடியோ கொடுத்த மரண அடி.. 27 வயது இளம் போலீஸ் அதிகாரி எடுத்த விபரீத முடிவு.. கதறும் தந்தை.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த 27 வயதான இளம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் திவாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர் நீதிமன்ற வளாகத்தில் போதை நிலையில் தடுமாறியபடி இருந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தனர்.
பணியிடை நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, சுந்தரம் திவாரி கடுமையான மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் ஆளாகியிருந்ததாக அவரது தந்தை ஸ்ரீசந்திர திவாரி தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று அலிகாரின் பன்னா தேவி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டில், தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில் சுந்தரம் திவாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அலிகார் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார் ஜாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றினர். இந்த தற்கொலைக்கான துல்லியமான காரணம் மற்றும் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
