உட்கட்சி பூசல்களுக்கு மத்தியில் “திருப்பதிக்கு ரூ.99 லட்சம் சொகுசு காரில் பறந்த எடப்பாடி” என்ன காரணம்..? அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உட்கட்சி பூசல்களுக்கு மத்தியில் “திருப்பதிக்கு ரூ.99 லட்சம் சொகுசு காரில் பறந்த எடப்பாடி” என்ன காரணம்..? அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, ஆந்திர மாநிலம் திருமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் புதிய பிரம்மாண்ட சொகுசு காரில் சென்று சாமி தரிசனம் செய்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது . கோயிலுக்கு வருகை தந்த அவருக்குத் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு வழங்கியதைத் தொடர்ந்து, அவர் மூலவரைத் தரிசித்து வேத பண்டிதர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

பொதுவாக உள்ளூர் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரைப் பயன்படுத்தி வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டு டிஃபெண்டர் மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 99 லட்சம் ரூபாய் ஆரம்ப விலை கொண்ட இந்த ஆடம்பரமான காரில்தான் அவர் திருப்பதிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் விலை உயர்ந்த கார்களைக் கொண்ட அரசியல் பிரபலங்களின் பட்டியலில் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இணைந்துள்ளது.

Advertisement

அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழக வெற்றிக்கழகத்தில் (தவெக) இணையப் போவதாகவும், அதிருப்தி தலைவர்களுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பரவி வரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இவரது இந்த ஆன்மீகப் பயணம் அமைந்துள்ளது. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படும் தகவல்கள், அதிமுக தலைமைக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

மறுபுறம், தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சூழலில், ‘திருப்பதி சென்றால் திருப்பம் உண்டாகும்’ என்ற நம்பிக்கையின்படி எடப்பாடி பழனிசாமியின் இந்த விசிட் அவரது அரசியல் சவால்களைச் சமாளிக்க உதவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in