கல்லூரி விழாக்களுக்கு இனி இன்ஸ்டா, யூடியூப் பிரபலங்களுக்கு ‘நோ என்ட்ரி’… உயர்கல்வித்துறை கொண்டுவரும் அதிரடி விதிமுறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கல்லூரி விழாக்களுக்கு இனி இன்ஸ்டா, யூடியூப் பிரபலங்களுக்கு ‘நோ என்ட்ரி’… உயர்கல்வித்துறை கொண்டுவரும் அதிரடி விதிமுறை..!!

Published

on

கல்லூரிகளில் நடைபெறும் விழாக்கள் மற்றும் பட்டமளிப்பு நிகழ்ச்சிகளுக்கு இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளப் பிரபலங்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கும் நடைமுறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முன்பெல்லாம் கல்வி, அறிவியல் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்கள் மற்றும் கல்வியாளர்களே சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாகச் சமூக வலைதளப் பிரபலங்களை அழைக்கும் போக்கு அதிகரித்துள்ளதற்குக் கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக, சில பட்டமளிப்பு விழாக்களில் போதிய தகுதியும் அனுபவமும் இல்லாதவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து, அவர்களின் கைகளால் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கச் செய்வது குறித்து உயர்கல்வித்துறையின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையடுத்து, கல்லூரி விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினர்களைத் தேர்வு செய்வதில் பின்பற்ற வேண்டிய தகுதிகள் மற்றும் விதிமுறைகள் குறித்து நிலையான வழிகாட்டுதல்களை வெளியிட உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறையின் மூலம், உண்மையான சாதனையாளர்களுக்கும் தகுதியானவர்களுக்கும் மட்டுமே உரிய முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in