இனி லஞ்சமே கிடையாது… அதிரடி காட்டும் உயர்கல்வித்துறை.. லஞ்சம் வாங்கினால் சிக்க வைக்க வருகிறது புது வெப்சைட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி லஞ்சமே கிடையாது… அதிரடி காட்டும் உயர்கல்வித்துறை.. லஞ்சம் வாங்கினால் சிக்க வைக்க வருகிறது புது வெப்சைட்..!!

Published

on

உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் மற்றும் ஊழலுக்கு இடமிருக்காது என்றும், பணி நியமனம், பணி மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்துறையில் யாரேனும் லஞ்சம் கேட்டால் அதுகுறித்து மக்கள் எளிதாகப் புகார் அளிப்பதற்காகப் பிரத்யேக இணையதளம் ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்றும், புதிய அரசு பொறுப்பேற்று 60 நாட்கள்கூட ஆகாத நிலையில் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பிரச்சினைகள் படிப்படியாகச் சரிசெய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மாணவர்களின் நலன் கருதி, கல்வியோடு கூடிய வேலைவாய்ப்பை வழங்குவதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய கல்விக்கடன் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். தற்பொழுது ரூ. 4.5 லட்சத்திற்கு மேல் கல்விக்கடன் கேட்கும்போது பிணை கோரப்படும் விதியை மாற்றி, புதிய திட்டத்தை முதல்வர் விரைவில் அறிவிக்க உள்ளார் என்றும், இந்த ஆண்டில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in