பகீர்…! வீட்டின் முன்பே காத்திருந்த ஆபத்து… திடீரென ஆக்ரோஷமாக பாய்ந்த 2 காட்டு யானைகள்… தலைதெறிக்க ஓடி நூலிழையில் உயிர் தப்பிய தேயிலை தோட்ட தொழிலாளி..! மூணாறில் நெஞ்சை உலுக்கும் திக் திக் நிமிடங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்…! வீட்டின் முன்பே காத்திருந்த ஆபத்து… திடீரென ஆக்ரோஷமாக பாய்ந்த 2 காட்டு யானைகள்… தலைதெறிக்க ஓடி நூலிழையில் உயிர் தப்பிய தேயிலை தோட்ட தொழிலாளி..! மூணாறில் நெஞ்சை உலுக்கும் திக் திக் நிமிடங்கள்..!!

Published

on

ஆக்ரோஷத்துடன் துரத்திய காட்டு யானைகளிடம் இருந்து தொழிலாளி நூலிழையில் உயிர் தப்பினார். யானைகள் நடமாட்டம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள கன்னிமலை எஸ்டேட்டில் உள்ள வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த தேயிலை தோட்டத் தொழிலாளியை இரண்டு காட்டு யானைகள் திடீரென தாக்க முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தார். இதனால் யானைகளிடம் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பி பாதுகாப்பான இடத்திற்கு சென்றார். இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

Advertisement

மூணாறு மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்புகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்குள் யானைகள் அடிக்கடி புகுந்து வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in