கூட்டணிக்காகப் பின்வாங்கிய தேமுதிக..? மாணிக்கம் தாகூருக்கு எதிரான வழக்கு வாபஸ்.. விஜய பிரபாகரனின் ‘ஷாக்’ மூவ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கூட்டணிக்காகப் பின்வாங்கிய தேமுதிக..? மாணிக்கம் தாகூருக்கு எதிரான வழக்கு வாபஸ்.. விஜய பிரபாகரனின் ‘ஷாக்’ மூவ்..!!

Published

on

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தற்போது திரும்பப் பெற விஜய பிரபாகரன் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தேர்தல் மனுவில், மாணிக்கம் தாகூரின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் பி. மூர்த்தி ஆகியோர் இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளதால், இம்முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in