“ஜோசியக்காரர்கள் பேசுவதை சீரியஸாக எடுத்துக்காதீங்கப்பா..!” எம்.எல்.ஏ கனிமொழியின் பேச்சு ஆருடம் மட்டுமே… தவெகவுக்கு மாணிக்கம் தாகூர் மறைமுகச் சாடல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஜோசியக்காரர்கள் பேசுவதை சீரியஸாக எடுத்துக்காதீங்கப்பா..!” எம்.எல்.ஏ கனிமொழியின் பேச்சு ஆருடம் மட்டுமே… தவெகவுக்கு மாணிக்கம் தாகூர் மறைமுகச் சாடல்…!!

Published

on

ஜோசியக்காரர்கள் சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், தமிழக வெற்றிக் கழகத்தினரை மறைமுகமாகச் சாடியுள்ளார். சமீபத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கனிமொழி பேசுகையில், ராகுல் காந்தியே தவெக தலைவர் விஜய்யை நாட்டின் பிரதமராக அமர வைப்பார் எனக் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில் இது குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், அது வெறும் ஜோசியக்காரர்களின் ஆருடம் மட்டுமே தவிர, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று விளக்கமளித்தார். மேலும், அது தனிப்பட்ட நபரின் சொந்தக் கருத்து என்பதைத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரே ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டதாகச் சுட்டிக்காட்டி இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in