LATEST NEWS
வேட்டைக்காரன் வரேன்னு சொன்னீங்களே.. ஓடுங்க ணே.. கர்நாடகா போய் வேட்டையாடுங்க ணே.. முதல்வர் விஜய்யை மேடையில் வம்பிக்கிழுத்த விஜயபிரபாகரன்..!!
தமிழகத்திற்கு மேகதாது அணை விவகாரத்தில் நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தேமுதிக சார்பில் தருமபுரியில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தத் தமிழக உரிமைக்கான போராட்டத்தில் தேமுதிகவின் இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு மேடையில் ஆவேசமாக உரையாற்றினார்.
விஜய பிரபாகரன் தனது பேச்சில் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் மௌனம் காக்கும் பிற அரசியல் கட்சிகளையும், குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யையும் மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். “ஓடு ஓடு வேட்டைக்காரன் என்று பாடுனீங்களே.. வேட்டைக்காரன் வரேன்னு சொன்னீங்களே.. ஓடுங்க அண்ணே.. கர்நாடகா போய் வேட்டையாடுங்க அண்ணே..” என விஜய்யின் திரைப்படப் பாடலையும், அரசியல் வருகையையும் சுட்டிக்காட்டி காட்டமாகச் சாடினார்.
மக்களின் வாழ்வாதாரமான காவிரி நீர் மற்றும் மேகதாது அணைப் பிரச்சினையில் புதிய கட்சிகள் களமிறங்கி கர்நாடக அரசிடம் தங்களின் உரிமையைக் கேட்டுப் போராட வேண்டும் என்ற தொனியில் விஜய பிரபாகரன் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அரசியல் வட்டாரத்தில் தவெக மற்றும் தேமுதிக ஆதரவாளர்களிடையே இந்த விவகாரம் தற்பொழுது ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
