திருப்பரங்குன்றத்தில் திடீர் திருப்பம்.. தமிழக அரசுக்கு பலத்த அடி.. களத்தில் இறங்கும் மத்திய ரிசர்வ் படை… உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருப்பரங்குன்றத்தில் திடீர் திருப்பம்.. தமிழக அரசுக்கு பலத்த அடி.. களத்தில் இறங்கும் மத்திய ரிசர்வ் படை… உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

Published

on

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளையே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே மீறியதாகக் கூறி, தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் இந்த முக்கிய ஆணையைப் பிறப்பித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த தீர்ப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

இந்த உத்தரவை எவ்விதத் தடையுமின்றி நிறைவேற்றும் வகையில், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மற்றும் அங்குள்ள கோயில், தர்கா ஆகியவற்றின் பாதுகாப்புப் பொறுப்பை உடனடியாக மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க உள்ளூர் காவல்துறை தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், கோயிலின் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்துவிட்டு, கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரைப் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.

Advertisement

மேலும், மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவிற்குப் போதிய CRPF பாதுகாப்பு வழங்குவதோடு, தர்காவிற்கு வழிபாடு நடத்தச் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களை யாரும் தடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே சமயம், தர்காவைச் சுற்றி அனைத்துப் பக்கங்களிலும் 50 மீட்டர் தொலைவிற்கு அப்பால், தீபத்தூணில் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்றம், உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீயை எடுத்து வந்து நாளை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in