BREAKING: “உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து சுடர் எடுத்து..” நாளை மலை உச்சியில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் ஆணை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: “உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து சுடர் எடுத்து..” நாளை மலை உச்சியில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் ஆணை..!!

Published

on

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று (நவம்பர் 27) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடர் எடுத்துச் சென்று, நாளை (நவம்பர் 28) மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதால் திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பதிலாக, கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

Advertisement

மலை உச்சியில் உள்ள கல்தூணில் நாளை தீபம் ஏற்றுவதற்கான நேரத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழு ஆலோசித்து முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோயில் மற்றும் தர்கா பகுதிகளுக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்கவும், அனைத்து பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in