LATEST NEWS
BREAKING: சூலூர் சிறுமி வன்கொடுமை கொலை வழக்கில் வெளியான அதிரடி தீர்ப்பு… குற்றவாளிகளுக்குக் காத்திருக்கும் உச்சகட்ட தண்டனை – பரபரப்புத் தகவல்..!!
கோவை சூலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று (நவம்பர் 27) பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் மற்றும் சாட்சியங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி இவர்கள் இருவரின் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவருக்குமான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
