LATEST NEWS
கொடூரக் கொலைக் காட்சிகள்…! கோவை சூலூரில் சிறுமியை முடித்த விதம் குறித்து நடித்து காட்டிய குற்றவாளி கார்த்திக்… பரபரப்பு சம்பவம்…!!
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில், கார்த்திக் (34) மற்றும் அவரது கூட்டாளி மோகன் (31) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். இதில் கார்த்திக் போலீசாரிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்தபோது அவரது கை, கால்கள் உடைந்தன. இக்கொடூரக் குற்றம் குறித்து விரிவான விசாரணை நடத்தப் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தார். காவல் துறையினரின் விசாரணையில், கார்த்திக் சிறுமியைக் கற்பழித்துக் கொன்றதும், அதற்கு மோகன் உடந்தையாக இருந்ததும் உறுதியானது; இதனைத் தொடர்ந்து, சிறுமியைக் கடத்தியது முதல் குளக்கரையில் கொலை செய்தது வரை எப்படி என்று குற்றவாளி கார்த்திக்கை சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் நடித்துக் காட்டச் செய்து பதிவு செய்தனர்.
3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரும் கோவையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, கைதான இருவரையும் வரும் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இரண்டு குற்றவாளிகளையும் போலீசார் கோவை மத்தியச் சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைத்தனர். இக்கொடூரச் சம்பவம் கோவை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
