LATEST NEWS
தோற்றாலும் அவர்தான் பெஸ்ட்…! “விஜய்க்கு ஓட்டு போட்டுட்டு மக்கள் கதறி அழறாங்க…” கூட்டணியில் இருந்தே வெளுத்து வாங்கிய செல்வபெருந்தகை…. வெடித்த மோதல்…!!
தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததை மறைமுகமாகக் கேலி செய்யும் வகையில் குட்டிக்கதை கூறி நையாண்டி செய்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முதலமைச்சரின் இத்தகைய செயல்பாட்டை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சட்டசபை என்பது மிகவும் மாண்புமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் இடமே தவிர, அது கைகளைக் காட்டிப் பேசுவதற்குக் சினிமா படப்பிடிப்புத் தளம் கிடையாது என்றும், முதலமைச்சரின் இந்த அநாகரீகமான அணுகுமுறையைக் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் மட்டும் மு.க.ஸ்டாலினின் சாதனைகளையோ அல்லது அவரது வரலாற்றையோ யாராலும் மறைத்துவிட முடியாது என்று குறிப்பிட்ட செல்வபெருந்தகை, இரண்டாம் உலகப் போரில் வென்ற வின்சென்ட் சர்ச்சில் கூடத் தேர்தலில் தோற்றதை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
கலைஞர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற ஸ்டாலினின் முற்போக்கான திட்டங்களைத்தான் தற்போதைய புதிய அரசும் நடைமுறைப்படுத்தி வருகிறது என்றும், உணர்ச்சிவசப்பட்டு விஜய்க்கு வாக்களித்த மக்கள் இப்போது தங்களிடம் வந்து கதறி அழுவதாகவும் அவர் கூறியுள்ளார். தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள சூழலிலும், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தராமல் பிறரைத் தனிப்பட்ட முறையில் புண்படுத்துவது முறையல்ல என செல்வபெருந்தகை அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
