அடச்சீ நீ மனுஷனா..! பிரசவ வலியில் கதறிய பெண்.. கண்டுகொள்ளாமல் ஜாலியாக வீடியோ காலில் அரட்டை அடித்த ஊழியர்.. அரசு மருத்துவமனையில் கொடூரம்.. இணையத்தைக் கொதிக்க வைக்கும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடச்சீ நீ மனுஷனா..! பிரசவ வலியில் கதறிய பெண்.. கண்டுகொள்ளாமல் ஜாலியாக வீடியோ காலில் அரட்டை அடித்த ஊழியர்.. அரசு மருத்துவமனையில் கொடூரம்.. இணையத்தைக் கொதிக்க வைக்கும் பகீர் வீடியோ..!!

Published

on

அரசு மருத்துவமனையில் மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பில்லிங் கவுண்டரில் பணியில் இருக்க வேண்டிய ஊழியர் ஒருவர், தன் கடமையை முற்றிலும் மறந்துவிட்டுத் தன் காதலியுடன் வீடியோ காலில் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்துள்ளார். ஜன்னலுக்கு வெளியே கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவ வலியால் கதறித் துடித்துக் கொண்டிருக்கும் நிலையிலும், அந்த ஊழியர் அதைக் சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளார்.

ये हालात हैं सरकारी अस्पताल के– बिलिंग काउंटर पर बैठा कर्मचारी अपना काम छोड़कर गर्लफ्रेंड से वीडियो कॉल पर मस्ती कर रहा है। मुस्कुरा रहा है, बातें कर रहा है… और खिड़की के बाहर लोग परेशान खड़े हैं।

एक प्रेग्नेंट महिला की हालत गंभीर है। इमरजेंसी वार्ड में ले जाने के लिए पर्चा और… pic.twitter.com/011zS8a509— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 7, 2026

அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குச் செல்ல உடனடியாக பில்லிங் சீட்டு தேவைப்பட்டதால், அப்பெண்ணின் உறவினர் “சீக்கிரம் சீட்டு குடுங்க, அவசரம்” என்று கதறிக் கூச்சலிட்டும் அந்த ஊழியர் அதைக் காதில் வாங்கவே இல்லை. உயிருக்குப் போராடும் நோயாளிகளின் நிலையைக் கண்டு இரக்கப்படாமல் சுயநலமாகச் செயல்படும் இதுபோன்ற ஊழியர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். வலியால் துடிக்கும் ஏழைப் பெண்ணைக் கண்டுகொள்ளாமல் வீடியோ காலில் மூழ்கியிருந்த ஊழியரின் இந்தச் செயல் மற்றும் இதுபோன்ற நிர்வாக அலட்சியம் ஒட்டுமொத்த அரசு மருத்துவமனை அமைப்பிற்கே பெரும் அவமானமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in