நான் யார் தெரியுமா..? டிக்கெட் கேட்ட TTE.. ஆடையைக் கிழித்துக் கொண்டு பெண் செய்த காரியம்… வீடியோவால் அம்பலமான உண்மை.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் யார் தெரியுமா..? டிக்கெட் கேட்ட TTE.. ஆடையைக் கிழித்துக் கொண்டு பெண் செய்த காரியம்… வீடியோவால் அம்பலமான உண்மை.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!

Published

on

எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் பயணச் சீட்டு பரிசோதகர் டிக்கெட் கேட்டபோது, பெண் பயணி ஒருவர் தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு, அவர் மீது பொய் வழக்குப் போடப் போவதாக மிரட்டிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் எங்கு நடந்தது, சம்பந்தப்பட்ட பெண்ணின் முழு விவரம் என்ன போன்ற தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ரயிலில் டிக்கெட் பரிசோதனை நடைபெற்ற போது, அந்தப் பெண்ணிடம் சரியான பயணச் சீட்டு இல்லாததால் அவர் பணத்தைக் கொடுத்துச் சமாளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது சகோதரர் ரயில்வே ஊழியர் என்று கூறிய அவர், அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது சகோதரருக்கு போன் செய்த அந்தப் பெண், டிக்கெட் பரிசோதகர் தனது ஆடையைக் கலைக்க முயல்வதாகப் பொய் புகார் கூறியுள்ளார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து, தன்னை ‘ராதிகா திவாரி’ என்று அடையாளப்படுத்திய அந்தப் பெண், தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு, டிக்கெட் பரிசோதகர் தன்னைத் தவறான எண்ணத்துடன் தொட்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூச்சலிட்டு அவதூறு பரப்பத் தொடங்கினார். ஆனால், தம்மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, அந்த டிக்கெட் பரிசோதகர் ஆரம்பத்திலிருந்தே இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, ரயில்வே பயனர்களுக்கான அதிகாரப்பூர்வ ஆதரவு எக்ஸ் கணக்கான ‘ரயில்வே சேவா’ இதற்குப் பதிலளித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க ஏதுவாக, சம்பந்தப்பட்ட ரயிலின் PNR எண் மற்றும் மொபைல் எண்களைப் பகிருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in