LATEST NEWS
“கீழே குதிக்கப் போறேன்..” ரயில்வே பாலத்தில் ஏறி கத்தி அலப்பறை நபர்.. இறுதியில் அதிகாரிகள் செய்த அசாத்திய காரியம்.. வைரல் வீடியோ..!!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரெணிகுண்டா இரயில் நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடைமேம்பாலத்தில் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் திடீரென பாலத்தின் மேல் ஏறி கத்திக்கொண்டே கீழே குதிக்கப் போவதாகக் கூறி கடும் கலாட்டாவில் ஈடுபட்டார். இதனால் விபரீதம் ஏதும் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்ட இரயில்வே அதிகாரிகள், உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்சார இணைப்பிற்கான மின் விநியோகத்தைத் துண்டித்தனர். இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, திருப்பதியில் இருந்து ரெணிகுண்டா சந்திப்பு வழியாகச் சென்னை, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா செல்லும் இரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து, பாலத்தில் இருந்து கீழே விழ வாய்ப்புள்ள தண்டவாளப் பகுதியில் பாதுகாப்பு வலையை அமைத்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அதிகாரிகள் அந்த நபரை சாதுரியமாகக் கையாண்டு, பத்திரமாக மீட்டுத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தால் ரெணிகுண்டா இரயில் நிலையத்தில் நீண்ட நேரம் பதற்றமான சூழல் நிலவியதுடன், இரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
