LATEST NEWS
சிறைக்கைதிகளே சிக்கன் பிரியாணி சாப்பிடும்போது.. பள்ளி மாணவர்கள் சாப்பிடக்கூடாதா..? அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி…!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ செப்டம்பர் 22-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவில் புதிய உணவு வகைகளைச் சேர்ப்பது குறித்து பரிந்துரைகள் வழங்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறைக் கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில் என்ன தவறு என அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார்.
மேலும், சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதேபோல், தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
