LATEST NEWS
“எங்க குடும்பத்துக்குக்கூட பாஸ் தரல”.. ஆனா திமுகவா இருந்தா.. திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் நிர்மல் குமார்..!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்ததை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தமிழக அமைச்சர் நிர்மல் குமார் சாடியுள்ளார். கும்பாபிஷேக விழாவின் போது தங்களது சொந்த குடும்பத்திற்குக்கூட சிறப்புப் பிரவேச அட்டை (பாஸ்) வழங்கப்படவில்லை என்றும், த.வெ.க ஆட்சியில் நடைபெற்ற இந்த ஆன்மீக விழாவில் அரசியல் தலைவர்கள் யாரும் தலையிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுகவினர் ஆட்சியில் இருந்திருந்தால் தங்களது குடும்பத்தினரை மட்டுமே முன்னிலைப்படுத்தியிருப்பார்கள் என்று விமர்சித்துள்ள அவர், தாங்கள் மக்கவோடு மக்களாகத்தான் விழாவில் பங்கேற்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
