LATEST NEWS
“குழந்தையை முதல்ல என் அப்பாவிடம் கொடுங்க…” பிரசவ வார்டில் பெற்ற மகள் சொன்ன உருக்கமான வார்த்தை.. இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ..!!
ஒரு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தவுடன், அவள் மருத்துவரிடம் “குழந்தையை என் அப்பாவிடம் கொடுங்கள்” என்று கூறும் உருக்கமான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களைக் கண்கலங்க வைத்துள்ளது. பிரசவ வார்டில் இருந்து குழந்தையை வெளியே கொண்டு வந்த மருத்துவர், அந்தப் பெண்ணின் தந்தை யார் என்று கேட்டு, பச்சிளம் குழந்தையை அவரது கைகளில் ஒப்படைக்கிறார். தன் மகளுக்குப் பிறந்த குழந்தையைத் தனது கைகளில் ஏந்திய அந்த நொடியில், அந்தத் தந்தை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரில் நனைகிறார். ஒரு பெண் பிள்ளையைப் பெற்று, அவளைப் பாதுகாப்பாக வளர்த்து, அவளுக்கு ஏற்றதொரு நல்ல கணவனைத் தேடிக் கண்டுபிடித்துத் திருமணம் செய்து வைக்கும் நாள் வரை ஒரு தந்தை படும் தவிப்பும் கவலையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதிற்குள்ளேயே இந்த பொறுப்பு எனும் பாரத்தைச் சுமக்கும் தகப்பன், மகளின் வாழ்வு சிறப்படைந்தவுடன் நிம்மதியுடன் வெளிப்படுத்தும் அந்தப் பெருமூச்சு, பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கக் கூடிய ஒரு உன்னதமான தருணமாகும். பெண் பிள்ளையைப் பெற்று அவளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கியதில் அந்தத் தந்தை கொள்ளும் பெரும் பெருமிதம் இந்த வீடியோவில் பிரதிபலிக்கிறது. இந்த உணர்வுபூர்வமானப் பதிவு காண்போரின் நெஞ்சைத் தொடுவதோடு, மகளின் வாழ்க்கைப் பயணத்தின் அடுத்த கட்டத்தைக் காணும் ஒரு தந்தை அனுபவிக்கும் நிம்மதி என்பது வாழ்க்கையின் மிகவும் அற்புதமான அனுபவம் என்பதை நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது.
