LATEST NEWS
பாலியல் துன்புறுத்தல், கருக்கலைப்பு புகார்… பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நீக்கம்.. பெரும் அதிர்ச்சி..!!
பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரைப் பொறுப்பில் இருந்து நீக்கி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். பா.ஜ.க மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலர் திவ்யா சேஷாத்ரி, தன் மீது முருகானந்தம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தல் செய்ததாகக் கட்சியின் தேசியத் தலைமையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திவ்யா சேஷாத்ரி அளித்த புகாரில், முருகானந்தம் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதாகவும், கர்ப்பமடைந்த தன்னை கட்டாயப்படுத்தித் விருப்பத்திற்கு மாறாகக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதாக உறுதியளித்து ஏமாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நீக்க நடவடிக்கை பாய்ந்துள்ளது.
