LATEST NEWS
“பா.ஜ.க.வின் ஆதரவு கட்சி தி.மு.க. தான்..!” உண்மையை போட்டுடைத்த துரை வைகோ.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, பா.ஜ.க.விற்கு தி.மு.க. மறைமுக ஆதரவு அளித்து வருவதாகவும், வரும் காலங்களில் நேரடி ஆதரவைக் கூட வழங்கலாம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை எதிர்க்கும் முதன்மை நாடாளுமன்றக் கட்சியான காங்கிரஸை பலவீனப்படுத்தும் முயற்சியில் தி.மு.க. தற்போது இறங்கியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க. ஆதரவு அளிக்கப் போகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் காங்கிரஸ் இல்லாத மாற்று அணியை உருவாக்கி, பா.ஜ.க.வை எதிர்க்கும் பலமான ‘இந்தியா’ கூட்டணியை வலுவிழக்கச் செய்வதற்கான சதித்திட்டம் நடந்து வருவதாகவும் துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
