LATEST NEWS
பிபிஎல் வரலாற்றிலேயே முதல்முறை… நம்ம ஊர் சேப்பாக்கத்தில் பிக்பாஷ் லீக் கிரிக்கெட்.. சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற 16-வது பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டம், அதன் வரலாற்றிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வெளியே, இந்தியாவின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 12 அன்று நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனகேட்ஸ் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான சுமுகமான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லீக் நிர்வாகி பில் ரிக்பி தெரிவித்துள்ளார். சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
