மரண மாஸ் சாரே..! “சிக்சர் மழையால் சரித்திரம் படைத்த அபிஷேக் சர்மா” கோலிக்கு இணையாக 10 சதங்கள்.. ஒரே போட்டியில் பல உலக சாதனைகளைத் தகர்த்த இந்திய அணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மரண மாஸ் சாரே..! “சிக்சர் மழையால் சரித்திரம் படைத்த அபிஷேக் சர்மா” கோலிக்கு இணையாக 10 சதங்கள்.. ஒரே போட்டியில் பல உலக சாதனைகளைத் தகர்த்த இந்திய அணி..!!

Published

on

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் குவித்தது. இதையடுத்துக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 14.1 ஓவர்களில் வெறும் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய அபிஷேக் சர்மா, ஆப்கான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 30 பந்துகளில் சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக 34 பந்துகளை எதிர்கொண்ட அவர், 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனும் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

Advertisement

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை அபிஷேக் சர்மா தகர்த்துள்ளார். டி20 போட்டிகளில் அதிவேகமாகச் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 30 பந்துகளுடன் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் அதிவேக டி20 சதங்களில் இவர் 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும், அனைத்து டி20 போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 10 சதங்கள் அடித்து, அதிக சதங்கள் அடித்த இந்திய வீரரான விராட் கோலியின் சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்துள்ளார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இந்த வெற்றியின் மூலம், ஆண்களுக்கான டி20 போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட ரன்களை அதிக முறை (53 தடவை) எடுத்த அணிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அத்துடன், 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அதிக முறை (10 முறை) வெற்றி பெற்ற அணிகளில் கனடாவுடன் இணைந்து இந்தியாவும் சாதனைப் படைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in