“ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது… உதயநிதியை வச்சு ஒன்னும் பண்ண முடியாது..!” கே.என்.நேருவின் ரகசியத்தை உடைத்த துரை வைகோ.. அதிர்ச்சியில் உறைந்த அறிவாலயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது… உதயநிதியை வச்சு ஒன்னும் பண்ண முடியாது..!” கே.என்.நேருவின் ரகசியத்தை உடைத்த துரை வைகோ.. அதிர்ச்சியில் உறைந்த அறிவாலயம்..!!

Published

on

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மதிமுக எம்பி துரை வைகோ அவர் மீது பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, “கட்சியை நடத்த முடியாமல் திமுகவில் இணையப் போவதாகத் துரை வைகோ கூறினார்” என்று கே.என்.நேரு பேசியதை முற்றிலும் கட்டுக்கதை என மறுத்த துரை வைகோ, “கலைஞர் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது என்றும், மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது, உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது என்றும் என்னிடம் கூறியவரே கே.என்.நேரு தான்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திமுகவில் பல முக்கியப் புள்ளிகளையும், தற்போதைய அமைச்சர் அன்பில் மகேஷின் வீழ்ச்சிக்கும் கே.என்.நேருவே காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு அறிவாலய மேடையிலேயே தனக்குக் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், செத்தாலும் அந்தச் சின்னத்தில் நிற்க மாட்டேன் என்று தான் மறுத்துவிட்டதாகவும் துரை வைகோ தெரிவித்துள்ளார். தங்களைச் சிறுமைப்படுத்துவதும், பண்ணையார் அரசியல் செய்வதும் என்னிடம் பலிக்காது என்று எச்சரித்த அவர், தனிமனிதத் தாக்குதல்களுக்கோ மிரட்டல்களுக்கோ தான் பயப்படப் போவதில்லை என்றும், தனக்கும் பல ரகசியங்கள் தெரியும் என்பதால் அனைத்தையும் பேச நேரிடும் என்றும் சவால் விடுத்துள்ளார். மேலும், மிசா காலத்தில் தான் பிறக்கவில்லை என்று கூறிய கே.என்.நேருவிற்கு, தனக்கு அப்போது 3 வயது என்ற வரலாறு கூடத் தெரியவில்லை என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளது தற்போதைய கூட்டணி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in