“யாருக்கும் ஆதரவு இல்லை..” இரவோடு இரவாக அறிவித்த அன்புமணி.. அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி பழனிச்சாமி.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாருக்கும் ஆதரவு இல்லை..” இரவோடு இரவாக அறிவித்த அன்புமணி.. அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி பழனிச்சாமி.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!

Published

on

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில், பாட்டாளி மக்கள் கட்சி நடுநிலை வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல்களில் பா.ம.க. நேரடியாகப் போட்டியிடாது என்று முன்பே தெளிவுபடுத்தப்பட்டிருந்த சூழலில், தற்போது கட்சி நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் தங்களுடைய ஆதரவு கிடையாது என்ற இறுதி முடிவை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் பா.ம.க. தங்களுக்கு ஆதரவளிக்கும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், அன்புமணியின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அ.தி.மு.க.விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதிகளில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் நேரடியாகக் களம் காண்பதால் தற்போது ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in