“தாயை இழந்து தவித்த பூனைக்குட்டி.. ஓடோடி வந்து பால் கொடுத்த நாய்..! இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தாயை இழந்து தவித்த பூனைக்குட்டி.. ஓடோடி வந்து பால் கொடுத்த நாய்..! இணையத்தை கலக்கும் நெகிழ்ச்சி வீடியோ..!!”

Published

on

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வருகிறது. அதே பகுதியில் தாயை இழந்து தவித்த சிறிய பூனைக்குட்டி ஒன்று பசியால் வாடியது. பூனைக்குட்டியின் நிலையை உணர்ந்த அந்த நாய், அதற்கு தன் தாயன்பை வெளிப்படுத்தியுள்ளது. பொதுவாக நாயும் பூனையும் எதிரெதிர் துருவங்களாக கருதப்படும் நிலையில், இந்த நாய் தன் குட்டியைப் போலவே அந்த பூனைக்குட்டியையும் பாவித்து, படுத்துக்கொண்டு அதற்கு பால் கொடுத்து பசியாற்றியுள்ளது.

நாயிடம் எந்தவித பயமும் இன்றி அந்த பூனைக்குட்டி மிக உரிமையோடு பால் குடிக்கும் நெகிழ்ச்சியான காட்சி, பார்ப்பவர்களின் கண்களைக் குளிரச் செய்துள்ளது. இந்த அரிய மற்றும் பாசப் பிணைப்பைக் கொண்ட காட்சியை அங்குள்ளவர்கள் தங்களது மொபைல் போனில் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இந்த நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மனிதர்களில் சில சமயங்களில் பாசம் குறைந்து வரும் இந்நாட்களில், முற்றிலும் மாறுபட்ட இரு விலங்கினங்களுக்கு இடையே வெளிப்பட்ட இந்த தூய்மையான தாய்மைப் பாசம் மனிதர்களுக்கு ஒரு மிகச் சிறந்த பாடமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in