LATEST NEWS
அய்யோ கடவுளே..! திடீரென குறுக்கே வந்த நாய்… நிலைதடுமாறி டிவைடரில் மோதிய பைக்.. 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி..! நெஞ்சை பதற வைக்கும் விபத்து..!!
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் ஹர்நௌத் காவல் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரே பைக்கில் சென்ற ஐந்து நண்பர்கள், திடீரெனக் குறுக்கே வந்த நாயைக் காப்பாற்றும் முயற்சியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை டிவைடரில் மோதியது. இந்த விபத்தில் இரண்டு சகோதரர்கள் உட்பட 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவில் ஐந்து நண்பர்களும் வீட்டின் அருகில் பட்டாசுகளை வெடித்த பிறகு, ஒரே மோட்டார் சைக்கிளில் ஹர்நௌத்தில் இருந்து கோனவான் சாலை நோக்கிச் சுற்றுவதற்காகச் சென்றுள்ளனர். ஹர்நௌத் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பில்லர் எண் 51 அருகில் பைக்கை ஓட்டிச் சென்ற கௌதம் குமார் என்பவருக்கு முன்னால் திடீரென ஒரு நாய் வந்துள்ளது. அதைத் காப்பாற்றும் முயற்சியில் பைக்கின் சமநிலை குலைந்து, அதிவேகமாக வந்த பைக் நேராக டிவைடரில் மோதியது. இதனால் அனைவரும் தூக்கி எறியப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; அங்கு கௌதம் குமார் மற்றும் அபிமன்யூ இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் சிகிச்சை பெற்று வந்தபோது இளைய சகோதரரான அனிஷும் உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவத்தில் உயிரிழந்த சகோதரர்களின் தந்தை ஹர்நௌத் சந்தையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தில் இரண்டு மகன்களையும் இழந்த குடும்பத்தினருக்குப் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. ஹர்நௌத் காவல் நிலையப் பொறுப்பாளர் முகேஷ் குமார் வர்மா, மூன்று உடல்களையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
