“இரண்டு இடங்களில் தையல்…” வளர்ப்பு நாயைக் காப்பாற்றப் போய் நேர்ந்த விபரீதம்… மாணவியைக் கடித்துக் குதறிய அண்டை வீட்டு நாய்.. பெரும் சோக சம்பவம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

“இரண்டு இடங்களில் தையல்…” வளர்ப்பு நாயைக் காப்பாற்றப் போய் நேர்ந்த விபரீதம்… மாணவியைக் கடித்துக் குதறிய அண்டை வீட்டு நாய்.. பெரும் சோக சம்பவம்..!!!

Published

on

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் செக்டார்-37 பகுதியில், தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி சென்ற பி.டெக் மாணவி ஒருவரை, அண்டை வீட்டுக்காரரின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் கொடூரமாகக் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் நாய் தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது . பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறுகையில், அந்த நாய் அவரது மகளை மூன்று இடங்களில் மிகக் கொடூரமாகக் கடித்ததாகவும், அதில் இரண்டு இடங்களில் தையல் போடும் அளவிற்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது வளர்ப்பு நாயைக் காப்பாற்ற முயன்றபோதே அந்த மாணவி ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். நாய் உரிமையாளர்களின் அலட்சியமே இந்த விபரீதத்திற்குக் காரணம் என மாணவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நாய் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் தற்போது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in