“உன் பிறந்த தேதி எண் 7, என் வீட்டு எண் 4… அப்போ..” வீட்டு உரிமையாளரின் விசித்திர நிபந்தனை.. வாயடைத்துப் போன மருத்துவ மாணவி.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உன் பிறந்த தேதி எண் 7, என் வீட்டு எண் 4… அப்போ..” வீட்டு உரிமையாளரின் விசித்திர நிபந்தனை.. வாயடைத்துப் போன மருத்துவ மாணவி.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

மும்பையில் குடும்பத்துடன் வசித்து வரும் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தோழியுடன் இணைந்து வாடகைக்கு வீடு பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சந்தித்த வீட்டின் உரிமையாளர் மிகவும் படித்தவராகவும், நவீன சிந்தனை கொண்டவராகவும் தோற்றமளித்துள்ளார். வீட்டை முழுவதுமாகச் சுற்றிக் காட்டிய அந்தப் பெண்மணி, திடீரென மாணவியிடம் அவரது பிறந்த தேதியின் கூட்டுத்தொகையான நியூமராலஜி எண் என்ன என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மாணவி தனது பிறந்த தேதியைக் கூட்டிச் சொல்ல, அந்த எண் 7 என வந்துள்ளது. இதைக் கேட்ட வீட்டின் உரிமையாளர், தனது வீட்டின் எண் 4 என்றும், உங்களது 7-ஆம் எண்ணிற்கும் தனது வீட்டின் 4-ஆம் எண்ணிற்கும் பொருந்தாது என்றும் கூறி வீட்டை வாடகைக்குத் தர மறுத்துவிட்டார். பொதுவாக மும்பை போன்ற பெருநகரங்களில் திருமணமாகாதவர்களுக்கும், அசைவம் சாப்பிடுபவர்களுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதுண்டு; ஆனால், மிகவும் நவீனமானவராகக் காட்டிக்கொண்ட ஒருவர் நியூமராலஜி காரணம் காட்டி வீடு தர மறுத்த சம்பவம் தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in