LATEST NEWS
“சிஎம் யோகி ஆதித்யநாத் அவர்களே.. நான் தற்கொலை செய்துக்க போறேன்..” 25 நாட்களாகத் தொடர்ந்த கொடூரம்.. பி.ஏ.எம்.எஸ் மருத்துவ மாணவி வெளியிட்ட நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நேகா நர்சிங் ஹோமில் பி.ஏ.எம்.எஸ் படிக்கும் மாணவி ஒருவர், அங்கு பணிபுரியும் விக்னேஷ் திரிவேதி என்பவரால் கடந்த 25 நாட்களாகக் கடுமையான மன உளைச்சலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார். இது குறித்துப் புகார் அளித்தும் யாரும் தனக்குச் செவிசாய்க்காததால், மிகுந்த மனவேதனையடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கையில், உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமை மாறியுள்ளதாகக் கூறப்படும் வேளையில், ஏன் இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்கின்றன என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் துயரைக் கேட்டு, குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ் திரிவேதி மீது உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
