LATEST NEWS
“ச்சே..! 1 கோடி பேரை கண் கலங்க வைத்த வீடியோ! பெட்ரோல் பங்கில் முதுகில் குழந்தையுடன் உழைக்கும் தாய்… இணையத்தை அதிரவைக்கும் காட்சி..!!
லடாக்கில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தனது குழந்தையை முதுகுக்குப் பின்னால் கட்டிக்கொண்டு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, மக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. சாலைப் பயணங்களின் காணொளிகளைப் பகிரும் பிரியங்கா என்ற கணக்கிலிருந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்தக் காணொளி இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
அந்தக் காணொளியில், அந்தப் பெண் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் அதே வேளையில், அவர்களிடம் மிகவும் இன்முகத்துடன் பேசித் தனது பணியைச் செய்கிறார். அவருக்குப் பின்னால் துணியால் பாதுகாப்பாகக் கட்டப்பட்டுள்ள குழந்தை, அங்கு வந்து செல்லும் வாகனங்களையும் நடப்பவற்றையும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தபடி அமைதியாக இருக்கிறது. வேலை மற்றும் தாய்மை என இரண்டையும் ஒரே நேரத்தில் மிகவும் எளிதாகவும் சலனமில்லாமலும் கையாழும் அந்தப் பெண்ணைப் பாராட்டி, பிரியங்கா இந்தப்பதிவிற்கு “தூய்மையான மனதைக் கொண்ட மனிதர்கள்” எனத் தலைப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DeHhRPrThT_/?utm_source=ig_web_button_share_sheet
இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மேலும் சிலர், குழந்தை இருக்கும் போதிலும் அப்பெண் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்த பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இதுபோன்ற உழைக்கும் பெண்களைக் காணொளி எடுப்பவர்கள் வெறும் வீடியோ எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களுக்கு அன்பளிப்பு அளிப்பது போன்ற ஏதேனும் நேரடி உதவிகளையும் செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
