“நீதிமன்றத்திற்குள் பாய்ந்த சிங்கத் தந்தை..!” அடுத்த 2 நிமிடத்தில் மகனை கொன்ற கொலையாளிக்கு நேர்ந்த கொடூர கதி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீதிமன்றத்திற்குள் பாய்ந்த சிங்கத் தந்தை..!” அடுத்த 2 நிமிடத்தில் மகனை கொன்ற கொலையாளிக்கு நேர்ந்த கொடூர கதி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள மெக்லன்பர்க் கவுண்டி நீதிமன்றத்தில், தனது மகனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஓடிவந்து கொடூரமாகத் தாக்கிய அதிரடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2025 மே மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் ஜமரியே டிக்சன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மேரியன் மெக்நைட் என்பவனுக்கு, அரசு வழக்கறிஞர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நீதிபதி 1,00,000 டாலர் பிணை வழங்கினார். பிணையில் வெளிவந்த மெக்நைட், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததோடு, பிணை விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறி வந்துள்ளான். இதனால் அவனது பிணையை ரத்து செய்வதற்கான விசாரணைக்காக அவன் நீதிமன்றம் வந்திருந்தான்.

அப்போது நீதிமன்றத்தின் தாழ்வாரத்தில் மெக்நைட்டைக் கண்ட சிறுவனின் தந்தை ஷாஹீம் ஸ்னைப் ஆத்திரத்தில் அசுர வேகத்தில் ஓடிவந்து அவனது முகத்தில் பலத்த உதை கொடுத்து, சரமாரியாக அடித்துத் துவைத்துள்ளார். அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் தந்தையை இழுத்து, மின்சாரத் துப்பாக்கியால் கட்டுப்படுத்துவதற்குள் மெக்நைட் ரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஒரு தந்தை என்ற முறையில் அவர் தனது கடமையைச் செய்ததாக உறவினர்கள் அவருக்கு ஆதரவாகப் பேசினர். இந்த விபரீத மோதலால் பிணை ரத்து விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எனினும், அதன் பின்னர் நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணையில், மெக்நைட் தற்காப்புக்காகவே (Self-defense) துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, அவர் மீதான அனைத்துக் கொலைக் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்துள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in