கொள்ளை என நாடகமாடி கணவனைக் கொன்ற மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட சதித்திட்டம் அம்பலம் – நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொள்ளை என நாடகமாடி கணவனைக் கொன்ற மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட சதித்திட்டம் அம்பலம் – நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!!

Published

on

ஹரியானா மாநிலம் ரேவாரியில், கடந்த 2019-ஆம் ஆண்டு நூஹ் நீதிமன்ற எழுத்தர் சுரேந்திர குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் அமர்வு நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்திர குமாரின் மனைவி சீமா யாதவ், அவரது காதலன் அனில் மற்றும் நண்பர் மனிஷ் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் தலா ரூ.60,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த ஆரம்பத்தில், வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியின் போது தனது கணவர் கொல்லப்பட்டதாக சீமா யாதவ் காவல்துறையிடம் பொய் வாக்குமூலம் அளித்து வழக்கைத் திசைதிருப்ப முயன்றார். ஆனால், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சீமா யாதவின் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் அம்பலமாகின.

Advertisement

தொடர் விசாரணையில், சீமா யாதவிற்கும் அனிலுக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், நண்பர் மனிஷின் உதவியுடன் சுரேந்திர குமாரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. தகுந்த ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in