“ஐய்யோ கடவுளே இப்படியா ஆகணும்..” ரிஷப்ஷனில் திடீர்னு மயங்கி விழுந்த மாப்பிள்ளை… தகவல் கேட்டதும் மயக்கமான மணப்பெண்.. ஒரே நாளில் முடிஞ்சு போன திருமண வாழ்க்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐய்யோ கடவுளே இப்படியா ஆகணும்..” ரிஷப்ஷனில் திடீர்னு மயங்கி விழுந்த மாப்பிள்ளை… தகவல் கேட்டதும் மயக்கமான மணப்பெண்.. ஒரே நாளில் முடிஞ்சு போன திருமண வாழ்க்கை..!!

Published

on

பீகார் மாநிலம், கதிஹார் மாவட்டத்தில், கடந்த 25 ஆம் தேதி ஆயுர்வேத மருத்துவர் பவன்குமார் (25) என்பவருக்கு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, மறுநாள் (26-11-26) திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மணமகன் திடீரென சரிந்து விழுந்தார். இதனைக்கண்டு அங்கிருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மணமகள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். இந்தச் சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முதற்கட்ட தகவல்களின்படி, வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக பூர்னியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ​​இதையடுத்து அவர் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

Advertisement

மணமகனின் இந்த திடீர் மரணம் இரு குடும்பத்தினரையும் நிலைகுலையச் செய்துள்ளது. கணவர் உயிரிழந்த தகவலறிந்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், இதுவரை மணமகன் உயிர் இழப்பிற்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை. இருப்பினும், ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி துயர சம்பவமாக மாறிப்போனது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in