BREAKING: தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழ்நாட்டு மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59ஆக உயரும்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழ்நாட்டு மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59ஆக உயரும்..!!

Published

on

தொகுதி மறுவரையறைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரும் என ஒன்றிய சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 816 ஆக (50 சதவீதம்) அதிகரிக்கும் புதிய மசோதாவின் தரவுகளில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18%-லிருந்து 7.23% ஆக சற்று உயரும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலவாரியான இந்தப் புதிய இடஒதுக்கீட்டு விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in