LATEST NEWS
“பணத்தை அனாதைகளுக்கு கொடுத்துடுங்க”.. ஐடி ஊழியர் கடிதத்தில் ஒளிந்திருந்த ‘அந்த’ ரகசியம் என்ன?.. போலீஸ் விசாரணையில் திடீர் ட்விஸ்ட்…!!
தெலுங்கானா மாநிலம் ஜகித்யால் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஐ.டி. பெண் ஊழியரான சிந்துஜா என்கிற துஷாரிகா, ஐதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். 2015-ல் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற இவர், அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த நிலையில், சக ஊழியர் ராஜி ரெட்டி போன் செய்தும் எடுக்காததால் நேரில் சென்று பார்த்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த மியாபூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வீட்டில் சோதனை நடத்தி அவர் எழுதிய உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றினர். கடந்த 4 மாதங்களாகத் தனிமையாலும் கடுமையான மன அழுத்தத்தாலும் தவித்து வந்ததாகவும், அதிலிருந்து மீள முடியவில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குழந்தைகளின் மீது கொண்ட பிரியத்தால் தனது வங்கிக் கணக்கில் உள்ள முழுப் பணத்தையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்து வழக்குகள் மூலம் கிடைக்கும் சொத்துக்கள் அனைத்தும் ‘கேர் டிரஸ்ட்’ அமைப்புக்குச் சேர வேண்டும் எனவும் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மியாபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
