LATEST NEWS
“இன்னும் பாதி வேலை கூட முடியலையாம்..”பொங்கல் வேட்டி, சேலை தயாரிப்பில் இவ்வளவு பெரிய சிக்கலா? வசமாகச் சிக்கிய அமைச்சர்..!!
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளைத் தயாரிக்கும் பணிகள் இன்னும் பாதியளவு கூட நிறைவடையவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. வழக்கத்தை விடத் தாமதமாக இப்பணிகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டதே இந்தத் தாமதத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்டுள்ள நிலைமையைச் சமாளிக்க, முதலமைச்சரிடம் இருந்து தப்ப, ‘தானியங்கி தறிகள்’ மூலம் வேட்டி மற்றும் சேலைகளை உற்பத்தி செய்யும் முடிவில் அமைச்சர் விஜய் பாலாஜி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தானியங்கி தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான இந்த முடிவுக்கு நெசவாளர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
