டிராபிக் கண்ட்ரோல் பண்ணச் சொன்னா.. யூனிபார்ம் போட்டுக்கிட்டு கல்யாணப் பந்தியில இலை போட்டுக்கிட்டு இருக்காரு… வைரலான வீடியோவால் அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டிராபிக் கண்ட்ரோல் பண்ணச் சொன்னா.. யூனிபார்ம் போட்டுக்கிட்டு கல்யாணப் பந்தியில இலை போட்டுக்கிட்டு இருக்காரு… வைரலான வீடியோவால் அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி..!!

Published

on

பீகாரின் மோகாமா சட்டமன்ற உறுப்பினர் அனந்த் சிங்கின் மகள் சிவாங்கி சிங்கின் ஆடம்பர திருமணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தத் திருமண விழாவில் காவல்துறை சீருடையில் விருந்தினர்களுக்கு வழங்கி உணவு பரிமாறிய ஹோம் கார்டு காவலர் மீது பாட்னா போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தக் காவலர் சதீஷ் குமார் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் போக்குவரத்துப் பணியிலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்; மேலும் அவரிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.

திருமண விருந்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்த வேளையில், ஹோம் கார்டு காவலர் சதீஷ் குமார் சீருடையில் விருந்தினர்களுக்கு இலை வழங்கி உணவு பரிமாறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. திருமண நிகழ்வு நடைபெறும் பகுதியைச் சுற்றி போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் அவர் அமர்த்தப்பட்டிருந்த நிலையில், சாலையில் போக்குவரத்தைக் கவனிக்காமல் விருந்தினர்களைக் கவனிப்பதில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி ஹோம் கார்டு சதீஷ் குமாரை அடையாளம் கண்டனர். இதையடுத்து போக்குவரத்து எஸ்.பி. சாகர் குமார் ஜா உடனடியாக நடவடிக்கை எடுத்து, அடுத்த உத்தரவு வரும் வரை அவரைப் பாட்னா மாவட்ட தலைமையகத்தில் இணைத்தார்; துறைரீதியான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாட்னா மாவட்டத்தின் நத்வான் கிராமத்தில் நவம்பர் 25 அன்று நடைபெற்ற இந்தத் திருமணத்தில் சுமார் நான்கு லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in