“பெண்களை இழிவுபடுத்தும் AI வீடியோக்கள்”.. எல்லை மீறும் அரசியல் ஆபாச AI வீடியோக்கலால் திமுக – தவெக இடையே வெடிக்கும் சைபர் யுத்தம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பெண்களை இழிவுபடுத்தும் AI வீடியோக்கள்”.. எல்லை மீறும் அரசியல் ஆபாச AI வீடியோக்கலால் திமுக – தவெக இடையே வெடிக்கும் சைபர் யுத்தம்…!!

Published

on

உலகம் முழுவதும் அரசியல் பிரசாரங்களிலும் கருத்துருவாக்கத்திலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசியலிலும் எல்லை மீறிய ஆபாசப் பதிவுகள் விவாதத்தையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளன. சமீபத்தில் திமுகவைக் கிண்டல் செய்யும் விதமாக வெளியான ஒரு AI வீடியோவில், மேயர் பிரியாவின் முகம் திரைப்படப் பாடல் நடனக் காட்சியில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டதோடு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கனிமொழி மற்றும் உதயநிதி ஆகியோரும் சர்ச்சைக்குரிய வகையில் சித்தரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோவுக்கு திமுக மகளிர் அணி மற்றும் ஐடி விங் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையிலான பதிவுகள் தொடர்ந்து வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் முதல் மேயர் வரை தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள திமுகவினர், இது தொடர்பாக நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Advertisement

கட்சிகள் எதுவாக இருந்தாலும், அரசியல் விமர்சனங்கள் நாகரிக எல்லையைக் கடந்து பெண்கள் மற்றும் தலைவர்கள் மீதான ஆபாசத் தாக்குதல்களாக மாறுவது குறித்துப் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுவாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு எதிராக இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in