CRIME
“அடேய் யாருடா நீங்க..” சாலையோரத்தில் தொழுகை செய்துகொண்டிருந்த லாரி டிரைவர்… அடுத்த நொடியே பாய்ந்து வந்த கொடூரர்கள்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
எகிப்தின் பெனி சூப் மாகாணத்தில், சாலையோரத்தில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த லாரி ஓட்டுநர் ஒருவரை இரண்டு நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.
பெனி சூப் மாகாணத்தின் நுழைவாயிலாகவும், நைல் நதியின் கிழக்கு மற்றும் மேற்குக் கரைகளை இணைக்கும் முக்கியப் போக்குவரத்து மையமாகவும் திகழும் அட்லி மன்சூர் சாலையின் பரபரப்பான சினியா பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு சாலையில் நின்று தொழுகையில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநரை, இரண்டு நபர்கள் தாக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இணையத்தில் வேகமாகப் பரவியது.
இந்த வீடியோ வைரலான உடனேயே உடனடி நடவடிக்கை எடுத்த பெனி சூப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் அடையாளம் கண்டு அதிரடியாகக் கைது செய்தனர். இந்த மோதலுக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
