“விஜய் அண்ணாகிட்ட ஒரு கோரிக்கை…” மேடையில் அரசியல் பேசிய மாணவி.. அசந்துபோன அரங்கம்… முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன தெரியுமா..?!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் அண்ணாகிட்ட ஒரு கோரிக்கை…” மேடையில் அரசியல் பேசிய மாணவி.. அசந்துபோன அரங்கம்… முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன தெரியுமா..?!!

Published

on

தமிழக வெற்றிக் கழகம் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவின் இரண்டாம் கட்டம் இன்று நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கும்போது பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தேறின. முன்னதாக நிகழ்வில் பேசிய விஜய், “பள்ளிகளின் பாதுகாப்பில் விளையாடி இருக்கிறார்கள். அதில் நடந்த பிரச்சனைதான் கும்பகோணம் விபத்து. இப்போது நினைத்தாலும் பதறுகிறது. ஆனால் அதே போல பள்ளியின் பாதுகாப்பில் ஊழல் செய்பவதையேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? அப்போது கூட நான் என்னுடைய டேபிள் முன் ஃபைல் இருக்கிறது என்றுதான் சொன்னேன். உடனே எதிர்க்கட்சியிலிருந்து சவுண்டு. “அது என்ன ஃபைல் இருக்காமே, திறந்துதான் பாருங்களேன்” என்று சவுண்டு விட்டார்கள். நான் சட்டமன்றத்தில் கையைக் கட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருப்பேன். ஆனால் அவர்களே ஆசைப்பட்டு கேட்கிறார்கள். வேறு என்ன செய்வது? சரி, ஃபைல்களைத் திறங்கள் சார் என்றேன்.” எனப் பேசினார்.

சான்றிதழ் அளிக்கும் நிகழ்வில் சீராக மாணவ, மாணவியர் பெற்றோருடன் மேடையில் ஏறி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் முதல்வரை க்யூட்டாகவும் மாஸாகவும் போஸ் கொடுக்க சொல்லி புகைப்படம் எடுத்தனர். மேடையில் ஏறிய சிலர் மைக்கில் பேசவும் செய்தனர். பொதுவாக தாங்கள் படித்தது, விஜய்யை நேரில் பார்த்த அனுபவம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டனர். சிலர் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சிக்காரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement

மாணவ மாணவியரின் பேச்சு அரசியலையும் தொட்டது. மேடையில் ஏறிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், “என்னுடைய பெற்றோருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இல்லாவிட்டால் என்னால் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. என்னுடைய முனிசிபல் கேர்ள்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூல் மற்றும் பகவான் மகாவீர் முனிசிபல் ஹையர் செகண்டரி ஸ்கூல், சங்கர் நகர் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் நன்றாக சொல்லிக் கொடுத்ததால் தான் என்னால் இந்த இடத்துக்கு வர முடிந்தது.

மூன்றாவதாக, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த் சார். அவர் இல்லை என்றால் என்னால் காலேஜ் சேர்ந்திருக்க முடியாது. என்னுடைய 12-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை பார்த்த பிறகு நேரில் வந்து எனக்கு ரூ.75,000 நிதி உதவி வழங்கினார். அதை வைத்து தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன். கோயம்புத்தூரில் உள்ள மிகப்பெரிய கல்லூரியான பி.எஸ்.ஜி. காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் இப்போது படித்து வருகிறேன்.

Advertisement

விஜய் அண்ணா எப்படி தமிழ்நாட்டுக்கு வரமோ, அதே போல் மேட்டுப்பாளையத்துக்கு எங்கள் எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த் சார் வரம். இப்படி ஒரு நல்ல எம்.எல்.ஏ.-வை எங்களுக்கு கொடுத்ததற்கு விஜய் அண்ணாவுக்கு நன்றி. இந்த பிரம்மாண்டமான விழாவை நடத்துவதற்காகவும் மிகவும் நன்றி. இது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. அடுத்து வரும் சந்ததியினர் உங்களை பார்க்கணுங்கிறதுக்காகவே நன்றாக படிப்பார்கள். டி.வி.கே. உறுப்பினர்கள் எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அண்ணா, உங்களிடம் ஒரு கோரிக்கை; நீங்கள் மூன்று ஃபைல்ஸ் ஓபன் செய்யப் போகிறேன் என்று சொல்கிறீர்கள், அதை சீக்கரம் பண்ணுங்க. அதை பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.” எனப் பேச்சை முடித்தார். மாணவியின் கோரிக்கைக்கு விஜய் லேசான புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in